Random image

பாகிஸ்தான்: இம்ரான் அமைச்சரவை விரிவாக்கம்…புதிதாக 6 பேர் பதவி ஏற்றனர்

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி அதிக இடங்களைக் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அதன்பின்னர் அவரது அமைச்சரவையில் 15 பேர் அமைச்சர்களாகவும், 5 பேர் ஆலோசகர்களாகவும் பதவியேற்றனர்.

இந்நிலையில், இம்ரான் கான் தனது அமைச்சரவையை இன்று விரிவாக்கம் செய்துள்ளார். புதிதாக 6 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றுள்ளனர். அதிபர் மாளிகையில் அமைச்சர்களாக பதவியேற்றனர். முகமது ஷபிர் அலி, முராத் சயீத் ற்றும் முகமது ஹமத் அஸார் ஆகியோர் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர். அவர்களுக்கு அதிபர் ஆரிப் ஆல்வி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் பிரதமர் இம்ரான் கான், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். உமர் அயூப் கான் கடந்த பிப்ரவரி மாதத்தில் பிடிஐ கட்சியில் சேர்ந்தார். இதற்கு முன்பு சவுகத் அஜீஸ் அமைச்சரவையில் நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார் குறிப்பிடத்தக்கது.