பாகிஸ்தானையே தாக்கும் வல்லமை இந்தியாவிடம் உள்ளது’ என்று முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ் ப தெரிவித்திருக்கிறார்.
India-tests-missile-that-can-hit-Beijing-A91B6LHL-x-large
பாகிஸ்தான் அணு விஞ்ஞானி அப்துல் காதிர்கான்,” டெல்லியை 5 நிமிடத்தில் தாக்கும் வல்லமை எங்களிடம் உள்ளது”  என்று  பேசியது, இந்தியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்தி  இருக்கிறது.  அவரது பேச்சுக்கு பாதுகாப்பு படைகளின் முன்னாள் அதிகாரிகள் மூலம் இந்தியா  பதிலடி அளித்திருக்கிறது.
download (4)
இந்திய முன்னாள் ராணுவ தளபதி என்.சி.விஜ். “பாகிஸ்தான் அணுவிஞ்ஞானியின் கருத்து அவரது முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்துகிறது.  . அணு ஏவுகணைகள், போர் ஆயுதங்கள் அல்ல. அவை தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட வேண்டியவை. ஒட்டு மொத்த பாகிஸ்தானையே தாக்குகிற அளவுக்கு இந்தியாவிடமும் வல்லமை இருக்கிறது. ஆனால் அதைப்பற்றி நாம் பேசுவது இல்லை” என்று கூறினார்.
தவிர, பாகிஸ்தான் அணு விஞ்ஞானியின் பொறுப்பற்ற பேச்சுக்கு முன்னாள் ராணுவ அதிகாரி குர்மீத் கன்வால், முன்னாள் கடற்படை அதிகாரி மன்மோகன் பகதூர், முன்னாள் விமானப்படை அதிகாரி உதய்பாஸ்கர் உள்ளிட்டவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.