ஜம்முகாஷ்மீர் எல்லையில் பாக். மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவம் பதிலடி

ஸ்ரீநகர்:  பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலால் எல்லையில் பதற்றம் எழுந்துள்ளது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்துவதை பாகிஸ்தான் வழக்கமான நடவடிக்கையாக கொண்டுள்ளது. பாகிஸ்தானின் இந்த அத்துமீறல்களுக்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது.

இந் த நிலையில், ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மன்கோட் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் இறங்கியது.

6.30 மணியளவில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதாகவும்  இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may have missed