அமெரிக்காவின் வாடகை துப்பாக்கி அல்ல பாகிஸ்தான் – இம்ரான் கான்

இஸ்லமாபாத்:

னிமேலும், அமெரிக்காவின் வாடகை துப்பாக்கி போல் பாகிஸ்தான் செயல்படாது என்று அந்த நாட்டின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரராக இருந்து அரசியல்வாதியாக மாறிய இம்ரான் கான், சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று பாகிஸ்தானின் 22வது பிரதமராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். பிரதமராக பதவி ஏற்ற பின் முதல் முறையாக வெளிநாட்டு ஊடகமான வாஷிங்டன் போஸ்டிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, அமெரிக்கா உடனான உறவு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், வாஷிங்டனுடன் “சரியான உறவை” பாகிஸ்தான் விரும்புகிறது என்று இம்ரான் கான் தெரிவித்தார்.

உதாரணமாக, சீனாவுடனான உறவு ஒரு பரிமாணமல்ல. இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு வர்த்தக உறவு. அமெரிக்காவுடன் இது போன்ற உறவையே பாக்கிஸ்தான் விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், பாகிஸ்தான் ஒரு வாடகை துப்பாக்கி போல் நடத்தப்படுவதை தாம் ஒருநாளும் விரும்ப வில்லை என்றும், இந்த நிலைமையில் மீண்டும் ஒருபோதும் இருக்கக்கூடாது என்றும் கூறினார்.

கார்ட்டூன் கேலரி