ஷாங்காய்

சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கடற்படை சிஎம் 302 உள்ளிட்ட ஏவுகணைகளை வாங்கி உள்ளது.

பாகிஸ்தான் அணு ஆயுத சக்தி நாடு எனவும் மற்றொரு அணுசக்தி நாடான இந்தியாவுடன் போர் தொடுப்பது தற்கொலைக்கு ஈடானது எனவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். ஆயினும் இந்திய கடற்படை பல புதிய ஏவுகணைகளை தயார் செய்து சோதனையில் வெற்றி கண்டுள்ளது. பாகிஸ்தான் கடற்படையிடம் கடந்த 2005 ஆம் ஆண்டு முதலே அத்தகைய ஏவுகணைகள் இல்லாமல் இருந்து வந்தது.

தற்போது சீனாவிடம் இருந்து பாகிஸ்தான் கடற்படை சிஎம் 302, ஒய்ஜே 12 உள்ளிட்ட ஏவுகணைகளை கொள்முதல் செய்துள்ளது. இந்த தளவாடங்கள் சீனாவின் ஷாங்காய் நகரில் உருவாக்கப்பட்டவை ஆகும். இன்று இந்த தளவாடங்களை சீனா ஷாங்காய் நகரில் உள்ள தனது ஹுடாங் கப்பல் தளத்தில் இருந்து அனுப்பி வைத்துள்ளது.

இதில் சிஎம் 302 ஏவுகணை மிகவும் சதி வாய்ந்ததாகும். இந்த ஏவுகணை இந்திய கடற்படையிடம் உள்ள பிரமோஸ் ஏவுகணைக்கு ஈடானதாகும். இந்த பிரமோஸ் ஏவுகணைகள் மற்றும் சிஎம் 302 ஏவுகணைகள் ஆகிய இரண்டுமே ஒலியின் வேகத்தில் சென்ரு 400 கிமீ தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடியவை ஆகும். இந்த இரு ஏவுகணைகளுமே அமெரிக்க தொழில் நுட்பத்தை மிஞ்சும் அளவில் தரமானவைகள் ஆகும்.

இந்திய அரசு பிரமோஸ் ஏவுகணைகளை இந்தோநேசியாவுக்கு விற்பனை செய்ய உத்தேசித்துள்ளது குறிப்பிடத்தக்கது.