Random image

காஷ்மீர் வன்முறைக்கு பாக்கிஸ்தானே காரணம் – மெஹ்பூபா

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் நடைபெற்று வரும் வன்முறைகளுக்கு பின்னால் பாக்கிஸ்தான் இருப்பதாக ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்வரான மெஹ்பூபா முஃப்தி குற்றம்சாட்டியுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் அப் கி அதாலத் நிகழ்ச்சியில் பங்கேற்ற மெஹ்பூபா இவ்வாறு தெரித்தார். காஷ்மீரில் தற்போது நடந்து வரும் வன்முறைகளுக்கு முதன்முதலில் பாக்கிஸ்தான் தான் அடித்தளமிட்டதாகவும் அவர் குற்றிப்பிட்டுள்ளார்.
mehboopa
பாக்கிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று மெஹ்பூபா கருத்து தெரிவித்தார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் நரேந்திர மோடி காஷ்மீர் பிரச்சனையில் தோல்வியை சந்தித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ”ஒரு முறை மட்டும் இல்லை, பல முறை இந்தியா பாக்கிஸ்தானுடன் பேசி உள்ளது. ஆனால் பயனில்லை. எனினும் பலமுறை இந்தியா முயற்சிக்க வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

நிகழ்ச்சி தொகுப்பாளர் நிகழ்ச்சியின் நடுவில் 56 இன்ச் மார்மளவு உடைய மோடி மாறுபட்ட வகையில் தனது பணியை செய்துவருவதாக கூறப்பட்டதை அடுத்து, “ 56 இன்ச் கொண்ட நரேந்திர மோடி காஷ்மீர் மக்களுக்காக ஒரு ஒன்ச் அளவிற்கு முயன்றாலே தீர்வு கிடைக்கும்” என்று பதிலளித்தார்.