இந்தியாவை சாடிய பாகிஸ்தான் நீதிபதி – எதற்காக?

ராவல்பிண்டி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையின்போது, இந்தியாவில் ஜனநாயகம் நசுக்கப்பட்டு வருவது குறித்து சாடியுள்ளார்.

அதார் மினால்லா என்ற பெயருடைய அந்த நீதிபதி, “ஒவ்வொருவரின் அரசியலமைப்பு உரிமைகள் பாதுகாக்கப்படும். இது பாகிஸ்தான், இந்தியா அல்ல” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் புகழ்பெற்ற மனித உரிமை செயற்பாட்டாளர் மன்சூர் பஷ்தீனின் கைதைக் கண்டித்து போராடிய அவாமி தொழிலாளர் கட்சி(AWP) மற்றும் பஷ்தூன் தகாஃபுஸ் மூவ்மென்ட்(PTM) ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த 23 பேர் கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான பெயில் தொடர்பான வழக்கை விசாரிக்கையில் இவ்வாறு கூறினார் நீதிபதி.

அந்த 23 பேரில், மோஸின் தவார் மற்றும் அம்மார் ரஷீத் என்ற 2 இளம் பிரபலங்களின் மீது தேசதுரோக வழக்கைப் பதிவு செய்திருந்தனர் பாகிஸ்தான் காவல்துறையினர்.

இதன் மீதான விசாரணையின்போது, “அரசியலமைப்பு நீதிமன்றங்கள், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்கும். ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்படும். இது பாகிஸ்தான், இந்தியா அல்ல” என்று சாடினார்.