இனி பாகிஸ்தானில் தொலைக்காட்சி தணிக்கை கிடையாது : இம்ரான் கான்

ஸ்லாமாபாத்

னி அரசு தொலைக்காட்சி வானொலி உள்ளிட்ட ஊடகங்களின் செய்திகள் தணிக்கை செய்யப்பட மாட்டாது என பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அரசின் தொலைக்காட்சி, வானொலி உள்ளிட்ட அனைத்து ஊடகங்களில் தற்போது செய்திகள் தணிக்கைக்கு பிறகே ஒளிபரப்பபடுவது தெரிந்ததே.   பாகிஸ்தானில் கடந்த 17 ஆம் தேதி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றுக் கொண்டார்.  அவர் தனது வெற்றிக்குப் பின் பாகிஸ்தானில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வரப்போவதாக அறிவித்திருந்தார்.

அந்த சீர்திருத்தங்களில் ஒன்றாக தற்போது அரசு ஊடகங்களான தொலைக்காட்சி,  வானொலி உள்ளிட்டவைகளில் இனி செய்திகள் தணிக்கை செய்யப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.   இந்த தகவலை அந்நாட்டின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஃபவாட் ஹுசைன் தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்னும் மூன்று மாதங்களில் பல அதிரடி மாற்றங்களை இம்ரான்கான் அரசு நடைமுறைப்படுத்த உள்ளதாகவும் அந்த பதிவில் ஃபவாட் குறிப்பிட்டுள்ளார்.