பாக். மசூதியில் தற்கொலை படை தாக்குதல்: 23 பேர் பலி! 40 பேர் காயம்!!

--

1pak-1

முஹமந்த்

பாகிஸ்தான் மசூதியில் தற்கொலைபடை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 23 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 40 பேர் பலத்த காயங்களுடன்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் வட மேற்கு பகுதியில்,  ஆஃப்கானிஸ்தான் எல்லையில் உள்ள முஹமந்த் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில்  உள்ள மசூதியில் தற்கொலை படையை சேர்ந்த  தீவிரவாதி ஒருவர் நடத்திய தாக்குதலில்  23 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பலர்  காயம் அடைந்துள்ளனர்.

தாக்குதலின்போது மசூதியில் 200க்கும் மேற்பட்டோர் தொழுகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகள் நடந்து கொண்டிருந்த போது, அந்த தற்கொலை படை குண்டுதாரி  அல்லாஹு அக்பர் என்ற கத்திக்கொண்டே தன்னைத்தானே வெடிக்க வைத்து, தாக்குதல் நடத்தியுள்ளதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குண்டு வெடித்ததன் தாக்கம் காரணமாக, மசூதியின் ஒரு பிரிவு தகர்ந்து தொழுகையில் ஈடுபட்டு கொண்டி ருந்தவர்கள் மீது விழுந்தது.  இந்த தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் தீவிரி சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.