ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தான் அரசு தடை

ஸ்லாமாபாத்

பாகிஸ்தான் அர்சு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது.

பாகிஸ்தானின் தீவிரவாத ஆதரவு நடவடிக்கையை ஒட்டி பாகிஸ்தான் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடாமல் உள்ளது.   சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதலை தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா விளையாட எதிர்ப்பு எழுந்தது.   இரு நாடுகளும் சர்வதேச கிரிக்கெட் வாரியத்திடம் தொடர்ந்து புகார் அளித்து வருகின்றன

இந்தியாவில் புகழ்பெற்ற டி 20 கிரிக்கெட் போட்டிகளான ஐபிஎல் விரைவில் நடைபெற உள்ளது.   இந்த போட்டிகளுக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.   இந்த போட்டிகளின் முதல் ஆட்டம் நாளை சென்னையில் நடைபெற உள்ளது.    இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோத உள்ளது.

பாகிஸ்தான் செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஃபவத் அகமது சவுத்ரி, “ஐபிஎல் டி 20 கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதற்கு இந்தியாவின் நடவடிக்கைகளே முழுக் காரணம் ஆகும்.   இந்திய வீரர்கள் ராணுவ தொப்பி அணிந்து விளையாடி கிரிக்கெட்டை அரசியல் ஆக்கி உள்ளனர்.

இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறது.  பாகிஸ்தான் உள்ளூர் டி 20 கிரிக்கெட் போட்டியான பி எஸ் எல் போட்டிகள் இந்தியாவில் ஒளிபரப்பவில்லை.  இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் இந்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக பாகிஸ்தான் அரசு ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை விதித்துள்ளது” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி