பாகிஸ்தான்: இம்ரான்கான், ஷாகித்கான் வேட்பு மனுக்கள் தள்ளுபடி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் ஜூலை 25-ம் தேதி நடக்கிறது. இதில் இஸ்லாமாபாத் தொகுதியில் போட்டியிட முன்னாள் கிரிக்கெட் வீரரும் தெரிக் இ இன்சாப் கட்சி தலைவருமாஜ இம்ரான்கான், முன்னாள் பிரதமர் ஷாகித் கான் அப்பாஸி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனுவை சரியாக பூர்த்தி செய்யவில்லை என்று கூறி இருவரது மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. தேர்தல் தீர்ப்பாயத்தில் இதை எதிர்த்து நாளை முறையிட உள்ளனர். இம்ரான்கான் இஸ்லாமாபாத் உள்பட 5 தொகுதிகளில் போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் முஷாரப் வேட்புமனுவும் நீதிமன்ற உத்தரவின் படி நிராகரிக்கப்பட்டது.