டில்லி

பாகிஸ்தான் விமானிகளுக்கு ரஃபேல் விமானம் ஓட்ட பயிற்சி அளிக்கவில்லை என பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் சர்ச்சையில் உள்ள ரஃபேல் விமானம் கத்தார் விமானப் படையாலும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.   இந்த நாடு கடந்த 2015 ஆம் வருடம் 24 ரஃபேல் போர் விமானங்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது.  அதன்பிறகு 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேலும் 12 விமானம் வாங்க ஒப்பந்தம் செய்தது.   இந்த விமானங்களில் முதல் விமானங்கள் கடந்த பிப்ரவர் 6 ஆம் தேதி கத்தாருக்கு அனுப்பப்பட்டன.

இந்த வருடம் ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு வந்த கத்தார் நாட்டு விமானப்படை தலைவர் வந்திருந்தார்.   அப்போது அவர் பாகிஸ்தான் வீரர்களுக்கு தங்கள் விமானப்படை விமானங்களை ஓட்ட பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.   அதை ஒட்டி பாகிஸ்தான் விமானிகள் ரஃபேல் விமானத்தை ஒட்ட கத்தார் நாட்டில் பயிற்சி பெற்றதாக ஊடகங்களில் தகவல்கள் பரவின.

பல வருடங்களாக மத்திய கிழக்கு நாடுகளின் விமானப்படையில் பாகிஸ்தான்நாட்டை சேர்ந்த விமானிகள் பணி  புரிந்து வருகின்றனர்.   பாகிஸ்தான் தனது நட்பு நாடுகளான ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து வாங்கிய எஃப் 16 ரக போர் விமானத்தை கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி இந்தியா மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தியது.

எனவே இந்த ஊடகத் தகவல் உண்மை என பலரும் நம்பினர்

இந்த தகவல் இந்தியாவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.  பிரான்ஸ் அரசின் இந்திய தூதர் அலெக்சாடர் ஸீக்லர், “பாகிஸ்தான் நாட்டு விமானிகள் கத்தார் நாட்டில் ரஃபேல் விமானம் ஓட்ட பயிற்சி பெற்றதாக கூறப்படுவது போலிச் செய்தி ஆகும்   அவ்வாறு எந்த ஒரு பயிற்சியும் அளிக்கப்படவில்லை” என நான் உறுதி அளிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.