திருமணமான இந்து சிறுமிகளுக்கு பாதுகாப்பு அளிக்க போலீஸாருக்கு பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லமாபாத்:

மதம் மாற்றி திருமணம் செய்ததாகக் கூறப்படும் 2 இந்து சகோதரிகளுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸாருக்கு இஸ்லமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


13 மற்றும் 15 வயதான தங்கள் மகள்களை மதம் மாற்றி திருமணம் செய்து கொண்டதாகவும், தங்கள் மகள்களை மீட்டுத் தருமாறும் இஸ்லமாபாத் உயர் நீதிமன்றத்தில் பெற்றறோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,சிறுமிகளையும் அவர்களது கணவர்களையும் தனித் தனியை காப்பகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டது.

மேலும் சிறுமிகள் மதமாற்றம் செய்யப்பட்டு திருமணம் செய்யப்பட்டதா,அவர்கள் கடத்தப்பட்டார்களா என்பதை விசாரிக்குமாறும் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.