நாங்கள் முதலில் அணுஆயுதத்தை கையில் எடுக்கமாட்டோம்! இம்ரான்கான்

இஸ்லாமாபாத்:

நாங்கள் முதலில் அணுஆயுதத்தை கையில் எடுக்கமாட்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி உள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் முதலில் அணு ஆயுதங் களைப் பயன்படுத்தாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

ஜம்முகாஷ்மீரை பயன்படுத்தி இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து மறைமுகப்போர் செய்தும், பயங்கரவாதிகளை ஊக்குவித்தும், பிரச்சினைகள் ஏற்படுத்தி வந்தது. இந்த நிலையில், மத்திய அரசு கடந்த மாதம்  காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி, அதை இரு யூனியன் பிரதேகங்களாக மாற்றியது. மத்தியஅரசின் அதிரடி நடவடிக்கை பாகிஸ்தானுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இந்தியாவுடனான நட்பை முடிந்துகொண்ட பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. மற்றும் உலக நாடுகளிடையே எடுத்துச் சென்றது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியா வின் உள்நாட்டு விவகாரம் என்பதால், சீனாவைத் தவிர எந்தவொரு நாடும் தலையிட முன்வரவில்லை.

இதற்கிடையில் பாகிஸ்தானின் மிரட்டலைத் தொடர்ந்து, அணுஆயுதங்கள் பயன்படுத்துவதில், இந்தியாவின் ‘முதலில் பயன்படுத்த மாட்டோம்’ (No First Use-NFU) என்ற கொள்கை எதிர்காலம் ‘சூழ்நிலைகளை’ பொறுத்து மாற வாய்ப்பு உள்ளது என்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாகி1தானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.கூறி உள்ளார்.

இந்த நிலையில் லாகூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்,  இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுத நாடுகள். இந்த இரு நாடுகளுக் கிடையே பதற்றம் ஏற்பட்டால் அதனால் சர்வதேச நாடுகளும் பாதிப்பு அடையும். நாங்கள் எப்போதும் முதலில் அணு ஆயுதத்தை கையில் எடுக்க மாட்டோம்.

இவ்வாறு இம்ரான்கான் கூறி உள்ளார்.