டெல்லி:  இலங்கைக்கு  அரசுமுறை பயணமாக செல்ல உள்ள  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், இந்திய வான்வெளியை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 2019 மாதம் ஜூன் 13-14 அன்று  கிர்கிஸ்தானில்  நடைபெற்ற  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வதற்காகவும் முன்னதாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கும் அதே ஆண்டு அக்டோபரில் சவுதி அரேபியா விற்கும் அரசு முறை பயணமாக செல்லும்போது பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த இந்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது.  அதற்F  இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்தது.  இதற்கு காரணமாக காஷ்மீர் விவகாரத்தை சுட்டிக்காட்டியது.

இந்த நிலையில், தற்போது, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது அமைச்சரவை சகாக்கள் மற்றும்  வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி, தொழிலதிபர்கள்  உடன் இலங்கைக்கு செல்கின்றனர். அதற்காக இந்திய வான்வெளியை பயன்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் அரசு இந்திய அரசிடம் அனுமதி கோரியது.

இதற்கு  மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியஅரசின் நடவடிக்கை, வள்ளுவர் வாக்குக்கேற்ப,

‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ என்ற திருவள்ளுவரின் திருக்குறளுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது.

இலங்கை செல்லும்  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்,  அங்கு இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரைச் சந்தித்து, வர்த்தகம், முதலீடு, சுகாதாரம், கல்வி, வேளாண்மை, தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுற்றுலா ஆகியவை குறித்து விவாதிப்பார் என கூறப்படுகிறது.