குவெட்டா,
பாகிஸ்தானில் குவெட்டா நகரில் உள்ள போலீஸ் பயிற்சி கல்லூரி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 60 ஆக  உயர்ந்துள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா காவல் பயிற்சி மையத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது.
pak-policed-killed
பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத் தலைநகர் குவெட்டாவில் காவல் பயிற்சி மையம் உள்ளது. இங்கு நேற்று நள்ளிரவில் புகுந்த பயங்கரவாதிகள், அங்கு தூங்கிக்கொண்டிருந்த பயிற்சி காவலர்கள்மீது கண்மூடித்தன மாக இயந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
இதில் ஏராளமான பயிற்சி காவலர்கள் பலியாகினர். இதுவரை பலியான காவலர்களின் எண்ணிக்கை 60 தொட்டுள்ளது. மேலும் 90 பேர் பலத்த காயங்களுடன் சிகிசிசை பெற்று வருகிறார்கள். இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
p0ak3
மேலும் நூற்றுக்கணக்கான பயிற்சி காவலர்களை பிணை கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகவும் தெரிகிறது.
இதைத்தொடர்ந்து காவலர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மேலும்  பயிற்சி மையத்தில் இருந்த 200 முதல் 600 காவல் அதிகாரிகள் பத்திரமாக மீட்டக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடைபெற்றதை   பலோசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார்.
p0ak1
இந்த காவலர் பயிற்சி முகாமில் நடத்திய பயங்கர தாக்குதல் நடத்தியது லக்ஷர் இ ஜவாங்கி அமைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இன்னும் அதிகாரப்பூர்வமாக தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.