பாஜக அமோக வெற்றி: பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாழ்த்து!!

டில்லி:

17வது மக்களவைக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், பாஜக 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக மீண்டும் மோடி தலைமையில் பாஜக ஆட்சியை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், மோடிக்கு உலக தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் பாக் பிரதமர் இம்ரான்கானும் தனது வாழ்த்தினை தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதில்,  தேர்தலில் வெற்றியை நோக்கி நகரும் நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்கள்,   , “தெற்காசியாவின் அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.