Random image

பாகிஸ்தான் பிரதமர் சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டது

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் சொகுசு கார்கள் ஏலம் விடப்பட்டது.

பாகிஸ்தானில் பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்ற பின்னர் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த வகையில் பிரதமர் பயன்படுத்தும் விலை உயர்ந்த சொகுசு ரக கார்களை ஏலத்தில் விடப்படும் என்று அறிவித்தார்.

இன்று மெர்சிடஸ் பென்ஸ், 8 பி.எம்.டபிள்யூ கார்கள், 4,000சிசி திறன் கொண்ட 2 புல்லட் ப்ரூப் வாகனங்கள், 16 டொயோட்டா கார்கள், 4 புல்லட் ப்ரூக் லேண்ட் குரூசர் கார்கள், லெக்ஸஸ் ரக கார்கள் உள்ளிட்ட 102 சொகுசு கார்கள் இன்று ஏலம் விடப்பட்டது.

70 கார்கள் மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு ஏலம் போனது. முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் 8 எருமைகளையும் விற்பனை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. பயன்படுத்தப்படாமல் உள்ள 4 ஹெலிகாப்டர்களும் விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்து குண்டு துளைக்காத கார்களையும் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.அதிபர், பிரதமர், தலைமை நீதிபதி, முதல்வர்கள், செனட் தலைவர்கள் மற்றும் தேசிய சட்டமன்ற பேச்சாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் முதல் வகுப்பு விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.