Random image

சீனாவின் பொருளாதார வழித்தட திட்டப் பணிகளை மறு ஒழுங்குப்டுத்த வேண்டும்….பாகிஸ்தான் வற்புறுத்தல்

இஸ்லாமாபாத்:

சீனாவின் பொருளாதார வழித்தட திட்டத்தை மறுஓழுங்குப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய அரசு வலியுறுத்தியுள்ளது.

பெரிய அளவிலான உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்வதை தவிர்த்து மக்கள் வறுமை ஒழிக்கும் விதமாக தொழிற்சாலைகள் அமைத்தல் போன்ற முயற்சிகளை சீனா மேற்கொள்ள வேண்டும் என்று இம்ரான் கான் அரசு வலியுறுத்தியுள்ளது.

இம்ரான்கான் தலைமையிலான புதிய அரசு பாகிஸ்தானில் பொறுப்பேற்றது. இதையடுத்து பாகிஸ்தான் மற்றும் சீன அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது பாகிஸ்தானில் சீனா மேற்கொண்டு வரும் முதலீட்டு திட்டங்களில் பல மாற்றங்களை செய்ய வலியுறுத்தப்பட்டது. 6,200 கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார வழித்தடம் அமைக்கும் பணியை சீனா மேற்கொண்டு வருகிறது. இதில் சாலை அமைத்தல், ரெயில், மின் உற்பத்தி நிலையங்களும் அடங்கும்.

சீனாவின் தனியார் தொழிற்சாலைகள் பாகிஸ்தானில் அமைக்க வேண்டும். இதில் பாகிஸ்தான் வர்த்தகர்கள், தொழிலாளர்கள் இடம்பெற வேண்டும். இதில் சமூக பணியாக தூய்மை பணி சேர்க்கப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

புதிய அரசு சார்பில் இந்த மாற்றங்களை மேற்கொள்ள 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பொருளாதார வழித்தட திட்டத்தை ஆய்வு செய்யும். இந்த குழுவுக்கு திட்ட அமைச்சர் குஷ்ரோ பக்தியர் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.