பாகிஸ்தான் கேள்விகளை காப்பியடித்த அருணாச்சல் தேர்வு வாரியம்

கவுகாத்தி:

அருணாச்சல் அரசு தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் பாகிஸ்தான் இணையதளத்தில் உள்ள கேள்விகள் இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருணாச்சல் அரசு பணிக்கு போட்டி தேர்வுகளை ஏபிபிஎஸ்சி நடத்தி வருகிறது. இந்த தேர்வில் பாகிஸ்தான் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள கேள்விகள் இடம்பெற்று இருந்தது.

பாகிஸ்தானில் நடைபெறும் அரசு தேர்வுகளுக்கான தகவல்களை அடங்கிய (www.cssforum.com.pk) இணையதளத்தில் இருந்து 50 சதவீத்துக்கும் மேலான கேள்விகள் காப்பி அடிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் 2008-ம் ஆண்டு மத்திய அரசு பணியாளர் தேர்வாணய கேள்விகளும் காப்பி அடிக்கப்பட்டுள்ளது. விரைவில் கேள்வித்தாளில் இடம்பெற்று இருந்த தவறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.