நியூயார்க்:

மும்பை தாக்குதலில் மூளையாக விளங்கிய ஹாஃபிஜ் சயீதை நேர்காணல் செய்தவற்கு ஐநா சபையின் குழு விண்ணப்பித்திருந்த விசாவை நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நிராகரித்துவிட்டது.

தீவிரவாதிகள் பட்டியலில் இருந்து தன் பெயரை நீக்கக் கோரி ஹாஃபிஜ் சயீத் ஐநா.சபையில் விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில், தீவிரவாதி ஒருவர் பெயரை பட்டிலில் இருந்து நீக்கும் முன்பு நேரில் விசாரணை நடத்துவது ஐநாவின் விதிமுறையாக உள்ளது.

தனிப்பட்ட ஒருவரை சந்திப்பதற்கா விசா தர முடியாது என்று கூறி, நியூயார்க்கில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ஐநா.சபை குழுவினருக்கு விசா தர மறுத்துவிட்டது.

ஐநா குழு விசாரணை நடத்தும்பட்சத்தில், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் தீவிரவாத இயக்கங்களின் விவரம் தெரியவரும் என்ற அச்சத்தினாலேயே, ஐ.நா குழுவினருக்கு விசா மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.