நல்லெண்ண அடிப்படையில் சிறையில் உள்ள இந்திய மீனவர்கள் விடுதலை – பாக்கிஸ்தான்

பாக்கிஸ்தான் சிறைச்சாலையில் உள்ள 26 மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்ய பாக்கிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக பாக்கிஸ்தானில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என புதிதாக தலைமை ஏற்றுள்ள இம்ரான் கான் அரசு அறிவித்துள்ளது.

PakReleases

நாளை பாக்கிஸ்தானில் சுதந்திரம் கொண்டாடப்படுகிறது. நாளை மறுநாள் இந்தியாவில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட உள்ளது. கடந்த 11ம் தேதி பாக்கிஸ்தானின் புதிய பிரதமராக இம்ரான் கான் பதவி ஏற்றுள்ளார். புதிய அரசு பதவி ஏற்ற நிலையில் பாராளுமன்றத்தில் முதல் தடவையாக புதிய உறுப்பினர்கள் கூடினர். காலை 10 மணிக்கு பாராளுமன்ற இல்லத்தில் புதிய அமைச்சரவைக்கான ஆலோசனை கூட்டம் நடைபெறும் என பாக்கிஸ்தானின் ஜனாதிபதி மம்னூன் ஹுசைன் தெரிவித்திருந்தார். அதன்படி புதிய அமைச்சரவை கூட்டம் கூடியது.

இதில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதன்பின்னர், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லெண்ண அடிப்படையில் பாக்கிஸ்தான் சிறைச்சாலையில் உள்ள 26 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இம்ரான் கான் அரசு முடிவு செய்துள்ளது. கராச்சி சிறையில் உள்ள 26 மீனவர்கள் கனாட் ரயில் நிலையத்தில் இருந்து லாகூர் வழியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என பாக்கிஸ்தான் அரசு கூறியுள்ளது. அவர்களை வாகா எல்லைப்பகுதியில் இருந்து இந்திய வீரர்கள் பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்கிஸ்தானில் உள்ள மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதை இந்தியாவில் உள்ள பல தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி