டில்லி:

பாகிஸ்தான் மீதான  ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை இழந்துள்ளோம். அந்த விமானத்தை இயக்கிய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்  என்று மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறி உள்ளார்.

இதற்கிடையில் பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானப்படை விமானியான அபிநந்தனின் படத்தை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டு உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு பழிவாக்கும் வகையில்  நேற்று அதிகாலை இந்தியா -பாகிஸ்தான் எல்லையை தாண்டிச்சென்று  பயங்கரவாதிகளின் முகாம்களை  அழித்து நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகளையும் வேட்டையாடியது.

இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நீடித்து வருகிறது. இரு நாட்டு போர் விமானங்களும்  குண்டுகளை வீசி வருகின்றன. இன்று காலை பாகிஸ்தான் எல்லைக் கோடு பகுதி அருகே பறந்த 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தி விட்டதாக பாகிஸ்தான் அறிவித்த பாகிஸ்தான் மேஜர்,  விமானத்தில் பயணம் செய்த விமானிகள் 2 பேரை யும் பிடித்து வைத்திருப்பதாகவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை  பெற்று வருவதாகவும், மற்றொருவர்  கமாண்டர் அபிநந்தன் என்றும் தெரிவித்திருந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.

இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார், பாகிஸ்தான் மேஜரின் கூற்றை உறுதி செய்யும் வகையில் தகவல் தெரிவித்து உள்ளார்.

பாகிஸ்தான் மீதான  ராணுவ நடவடிக்கையின்போது துரதிர்ஷ்டவசமாக மிக்-21 போர் விமானம் ஒன்றை இழந்துள்ளோம். அந்த விமானத்தை இயக்கிய விமானி பாகிஸ்தான் வசம் இருக்கிறாரா என்பதை ஆய்வு செய்து வருகிறோம்  என்று  கூறினார்.

இந்த நிலையில், பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமான அபிநந்தனின் படத்தை பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டு உள்ளது. அத்துடன், தான் அபிநந்தன் என்று இந்திய வீரர் கூறும் வீடியோவையும் வெளியிட்டு உள்ளது.