இந்தியாவை செயற்கைகோள் மூலம் கண்காணிக்க பாகிஸ்தான் திட்டம்

இஸ்லாமாபாத்:

அடுத்த ஆண்டில் பாகிஸ்தான் தனது சொந்த வின்வெளி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியா மீது ஒரு பார்வை வைக்க திட்டமிட்டுள்ளது. அதோடு ராணுவம் உள்ளிட்ட இதர தேவைகளுக்காக வெளிநாட்டு செயற்கைகோள்களை நம்பியிருப்பதை குறைக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது.

வின்வெளியில் சொந்த வளத்தை பெருக்கி கொள்ள பாகிஸ்தான் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு செயற்கைகோள்களை மட்டுமே பாகிஸ்தான் தற்போது நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது.

வின்வெளி மற்றும் வான் சூழல் ஆராய்ச்சிக்கு ரூ. 400.70 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. இதில் 200.55 கோடி ரூபாய் புதிய 3 திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.100.35 கோடியை பல்நோக்கு செயற்கைகோள் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத்தில் வின்வெளி மையங்களை அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது.

ஏற்கனவே வின்வெளி விழிப்புணர்வு திட்டங்களை 2005ம் ஆண்டு முதல் மாணவர்கள் மத்தியில் பாகிஸ்தான் வின்வெளி நிறுவனம் ஏற்படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You may have missed