இஸ்லாம் மதத்துக்குள் உள்ள ஒரு பிரிவில் இருந்து இன்னொரு பிரிவுக்கு மாறியதற்காக, பெற்ற மகளையே ஆணவக்கொலை  செய்திருக்கிறார்கள்  பாகிஸ்தான் தம்பதியர்.
பாகிஸ்தானை சேர்ந்தவர் முக்தார் கசம். அவரது மனைவி பெயர் சாமியா சாகித். இருவருமே இங்கிலாந்து குடியுரிமையும் பெற்றவர்கள்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில்,  ஜூலை 20ந்தேதி  தனது தந்தையின் வீட்டில் இருந்த சாகித் கொலை செய்யப்பட்டார். இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் வந்து விசாரித்தபோது, விசாரணைக்கு சாகித் தந்தை ஒத்துழைக்கவில்லை.
சாகித் இயற்கை மரணம் அடைந்ததாக சொல்லி காவல்துறையினரை திருப்பி அனுப்பினார்.

பெற்றோரால் கொல்லப்பட்ட சாகித்
பெற்றோரால் கொல்லப்பட்ட சாகித்

ஆனால் சாகித் கணவர் முக்தார் கசம், “போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் சாகித் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்துள்ளார் என்றும், அவரது கழுத்து நெரிக்கப்பட்ட தழும்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
சாகித் என்னை திருமணம் செய்வதற்கு முன்பாக இஸ்லாமிய சன்னி பிரிவில் இருந்து ஷியா மதத்துக்கு மாறினார். இந்த நிகழ்வு அவரது பெற்றோருக்கு உறுத்தலாக இருந்துள்ளது. அதன் காரணமாக சாகித் கழுத்து நெரிக்கப்பட்டு அவரது பெற்றோரால் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இது ஒரு ஆணவக்கொலை” என்று  கூறினார்.
மேலும் அவர், “பாகிஸ்தானில் மதரீதியான ஆணவக்கொலைகள் அதிகம் நடைபெறுகிறது.   சில வாரங்களுக்கு முன்பு மாடல் அழகி பலோச் அவரது சகோதரால் கொல்லப்பட்ட  சம்பவம் நடந்தது.  .
இதுபோன்ற ஆணவக் கொலைகள்  சர்வதேச கவனத்தை ஈரத்துள்ளது என்று கூறினார். இது ஒரு கவுரவ கொலை. ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் நூற்றுக்கணக்கான பெண்கள் இவ்வாறு கொல்லப்படுகிறார்கள்.  பழமைவாதிகளுக்கு எதிராக முற்போக்குவாதிகள்  ஒன்று திரள வேண்டும்.
நானும் சாகித்தும் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்கள். ஆகவே சாதிக் மரணம் குறித்து இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அரசுகள் நியாயமான விசாரணை நடத்த வேண்டும்!”  என்று கூறினார்.