நவாஸ் ஷெரீப்பின் மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி!

இஸ்லாமாபாத்,

னாமா பேப்பர் விவகாரத்தில் பதவி இழந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை பாகிஸ்தான் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத பல கோடி சொத்துக்களை உலகம் முழுவதும் உள்ள  பிரபலங்கள் பதுக்கி வைத்துள்ளதாக பானா பேப்பர்ஸ் செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இதில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், கால்பந்து வீரர் மெஸ்ஸி, எகிப்தின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சுமார் 3 லட்சத்துக்கும் அதிமான நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் பிரதமரிடம் விசாரணை நடத்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.. இதுகுறித்த விசாரணைணை தொடர்ந்து நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, நவாஸ் ஷெரீப் சார்பில் மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனு நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், நவாஸ் ஷெரிப் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

இதன் காரணமாக அவரது கடைசி முயற்சியும் தோல்வியை சந்தித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.