85,246 ஆக உயர்வு: கொரோனா வைரஸ் பரவலில் சீனாவை மிஞ்சியது பாகிஸ்தான்…

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக சி.எஸ்.எஸ்.இ.யின் தரவுகளின்படி, தற்போதைய நிலையில், 84,160 நோயாளிகளுடன் சீனா 18 வது இடத்தில் உள்ளது, இது பாகிஸ்தானை விட ஒரு படி குறைவாக உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் 31,104 பேரும், கைபர்-பக்துன்க்வா 11,373 பேர், பலூசிஸ்தான் 5,224 பேர், இஸ்லாமாபாத் 3,544 பேர், கில்கிட்-பால்டிஸ்தான் 824 பேர் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 285 பேர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தரமான இயக்க நடைமுறைகளை தானாக முன்வந்து பின்பற்றுவதற்காக மக்களைப் பயிற்றுவிப்பதற்கும் நாடு முழுவதும் ஒரு பயனுள்ள ஊடக பிரச்சாரம் தொடங்கப்பட்டு வருவதாக திட்டமிடல் அமைச்சர் அசாத் உமர் தெரிவித்தார்.