குல்பூஷன் வழக்கு….17ம் தேதி பாகிஸ்தான் பதில் மனு தாக்கல்

இஸ்லாமாபாத்:

ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷண் ஜாதவ் பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. இதனை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடர்ந்துள்ளது,

இதனை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் மரண தண்டனையை நிறைவேற்ற பாகிஸ்தானுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் இந்தியா தரப்பில் கடந்த ஏப்ரல் மாதம் 17ம் தேதி எழுத்துப்பூர்வ மனு தாக்கல் செய்யப்பட்டது. பாகிஸ்தான் தனது பதில் மனுவை வரும் 17-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளது.

You may have missed