காஷ்மீர் எல்லை பகுதியில் இந்திய ராணுவத்தினர் 3 பேர் பலி: பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்

ஸ்ரீநகர்:

ந்திய எல்லை பகுதியில் பாதுகாப்பு பணியின்போது,  பாகிஸ்தான்  ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது நடத்திய தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய எல்லைப் பகுதிகளான லால்யாலி, ரஜோரி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினர் மீது சுமார் 50 மீட்டர் தொலைவில் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர்  திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த எதிர்பாராத தாக்குதலில் 3 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள், நவ்சேரா பகுதியை சேர்ந்த   ஹவில்தார் கவுசல் குமார், தோடா பகுதியை சேர்ந்த லான்ஸ் நாயக் ரஞ்சித்சிங், மற்றும் ஆங்கூர் பகுதியை சேர்ந்த வீரர் ரஜத்குமார் பசன் என்பது தெரிய வந்ததுள்ளது. மேலும், சம்பா பகுதியை சேர்ந்த ராகேஷ்குமார் படுகாயமுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை  பாதுகாப்பு படையினர் தேடி வருவதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார்.