ஜம்மு:

டந்த 24 மணிநேரத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய ராணுவ முகாம்கள் மற்றும் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீது  பாகிஸ்தான் ராணுவம், 3 முறை தாக்குதல் நடத்தியதை அடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பூஞ்ச் பிராந்தியத்தில்தான் இத்  தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  அங்குள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொதுமக்கள் வசிப்பிடங்கள் மீது திடீரென துப்பாக்கிகளால் சராமரியாகச் சுட்டும், சிறிய ரக குண்டுகள் வீசியும் பாகிஸ்தான் ராணுவம்  தாக்குதல் நடத்தியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், 3 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.  இதனால், பூஞ்ச் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் அஅனைத்தும் மூடப்பட்டன. அப்பகுதியில் இந்திய வீரர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டுவருகின்றனர்.

இப்பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர் தாக்குதலால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.