இஸ்லாமாபாத்: பாகிஸ்தானைச் சேர்ந்த 629 இளம்பெண்கள் மற்றும் சிறுமிகள், திருமணத்திற்காக சீனர்களுக்கு விற்கப்பட்டதாக வெளியான தகவல் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பாகிஸ்தானில் தற்போது சீனாவின் ஆதிக்கம் பெரியளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில்தான் தற்போது இந்த விவகாரம் வெளியாகியுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் பெண்கள் சீனாவுக்கு கடத்தப்படுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆனாலும், சீன அரசிற்கு பயந்து, இந்த விவகாரத்தைப் பெரிதாக்க பாகிஸ்தான் தயங்கி வருகிறது. கைதுசெய்யப்பட்ட பல சீனர்களும் பாகிஸ்தான் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெண்களுக்கும் மிரட்டல்கள் விடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் அரசின் உயரதிகாரிகள் இதுதொடர்பான விசாரணைக்கு கடும் நெருக்கடி கொடுத்து முடக்கப் பார்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது.