காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் ஆயுத சப்ளை….பகீர் தகவல்

--

டில்லி:

காஷ்மீரில் செயல்படும் லக்ஷ்கர் இ தொய்பா, தாலிபன்களுக்கும் பாகிஸ்தான் ராணுவம் ஆயுதம் சப்ளை செய்கிறது என்று அமெரிக்காவுக்கான ஆப்கன் தூதர் மஜீத் குரார் தெரிவித்துள்ளார்.

காபூலில் உள்ள ஆப்கன் ராணுவ மையம் மீது தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இதில் 5 வீரர்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து குரார் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ தாலிபன்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் ராணுவம் பயன்படுத்தக் கூடியது. இது வெளிச் சந்தையில் விற்பது கிடையாது.

பிரிட்டன் நிறுவனத்திடம் இந்த ஆயுதங்களை பாகிஸ்தான் ராணும் வாங்கி, காஷ்மீரில் இயங்கும் லக்ஷ்கர் இ தொய்பா, ஆப்கன் தாலிபன்களுக்கும் சப்ளை செய்கிறது. இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு பாகிஸ்தான் இந்த ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.