குவைத் அதிகாரி பர்ஸை திருடிய பாகிஸ்தான் அரசு செயலாளர்…..சிசிடிவி கேமரா மூலம் சிக்கினார்

--

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர், குவைத் அதிகாரியின் பர்ஸை திருடிய வீடியோ வெளியாகி பாகிஸ்தானுக்கு பெரும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அன்னிய முதலீடு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இதில் குவைத் நிதிதுறை அதிகாரிகள், பாகிஸ்தான் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர் அனைவரும் விருந்துக்கு சென்றனர். அப்போது அங்கிருந்த பாகிஸ்தான் நிதித்துறை செயலாளர் குவைத் அதிகாரிகள் அமர்ந்திருந்த மேஜை மீது இருந்த ஒரு பர்ஸை திருடினார்.

பர்ஸை காணவில்லை என்று குவைத் அதிகாரிகள் தேடினர். பின்னர் காணவில்லை என்று புகார் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தனர். அப்போது பர்ஸை திருடியது பாகிஸ்தான் முதலீட்டுத்துறை செயலாளர் ஜரார் ஹைதர் கான் என்பது தெரியவந்தது.

அவர் திருடிக் கொண்டு செல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பாகிஸ்தானுக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் டான், சாமா டிவி போன்ற மீடியாக்கள் வெளிப்படுத்தியுள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகி பெரும் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறது.