பாகிஸ்தான் வான் எல்லையில் நுழைந்த விமானத்தினை திசைமாற்றிய பாகிஸ்தான் போர் விமானம்

https://www.flightradar24.com தளத்தின் வழியாக பாகிஸ்தான் நாட்டு விமானப் போக்குவரத்தினை கவனித்துக்கொண்டிருக்கும்போது இரண்டு விமானங்கள் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பறந்துகொண்டிருந்தன. அவற்றில் ஒரு விமானம் காபூலில் இருந்து புது தில்லிக்கு வந்த விமானம். இன்னொரு விமானம் பாகிஸ்தான் நாட்டின் போர் விமானம்.

சிறிது நேரத்திற்குப் பிறகு புது தில்லி நோக்கி வந்த விமானம்  திசை மாறி பறந்து பாகிஸ்தான் நாட்டு எல்லையே கடந்தது. பாகிஸ்தான் இராணுவம் நேற்றிலிருந்து தன் வான்வெளியினை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தன்நாட்டு விமான எல்லையில் வேறு எந்த விமானமும் பறக்க அனுமதியில்லை. எனவே வழக்கமான வழியில் வந்த பயணிகள் விமானத்தினை பாகிஸ்தான் இராணுவ விமானம் வேறு திசையில் செல்ல வழியுறுத்திக்கலாம்

 

சிவப்பு கலரில் இருக்கும் விமானம் பாகிஸ்தான் போர் விமானம்

படத்தில் பயணிகள் விமானம் திசை திரும்புவதை காணலாம் இரண்டு புகைப்படங்களிலும் வலது புறம்  நேரம் காட்டப்படுகிறது

 

செல்வமுரளி