இந்தியா, அமெரிக்காவுக்கு எதிராக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சதி….உளவுதுறை அறிக்கை

வாஷிங்டன்:

பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டியிருப்பதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் சஞ்சுவான் ராணுவ முகாமிற்குள் புகுந்து ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 7 பேர் பலியாகினர்ர்.

இதை தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் டான் கோட்ஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‘‘ அணு ஆயுதங்கள், பயங்கரவாதிகள் நட்பு, பயங்கரவாத ஒழிப்புக்கு கட்டுப்பாடு விதித்தல், சீனாவுடன் நெருக்கம் போன்ற பாகிஸ்தானின் செயல்களால் அமெரிக்காவின் நலனுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் இந்தியா, ஆப்கானிஸ்தான் மட்டுமல்லாமல் அமெரிக்காவுக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார்.