அரியலூர்:

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை வேரோடு ஒழிக்க வேண்டும் என்று உயிரிழந்த அரியலூரை சேர்ந்த  சிஆர்பிஎப் வீரரின் மனைவி ஆவேசமாக கூறி உள்ளார்.

’பாகிஸ்தான் பயங்கரவாதிகளை கூண்டோடு ஒழிக்க வேண்டும் என்றும், சமீபத்தில் நடைபெற்ற புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் உயரிழந்த தமிழக வீரர்களின் மனைவிகள் ஆவேசமாக கூறி உள்ளனர்.

கடந்த 14-ந்தேதி காஷ்மீர் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குத லில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் 44 பேர் பலியாகினர். இதில் தமிழகத்தில் தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூர் மாவட்டத்தை  சேர்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் பலியானார்கள்.

இருவரின் உடல்களும் கடந்த 16-ந்தேதி அவர்களது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. பொது மக்கள் ஏராளமானோர் திரண்டு அஞ்சலி செலுத்தினர். அப்போது அங்கு திரண்டு நின்ற இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பியதோடு, அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடமும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், இன்று அதிகாலை இந்திய விமானப்படையினர் பாகிஸ்தானுக்குள் புகுந்து அதிரடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில்  ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டு இருந்த பயங்காரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய விமானப்படை வீரர்களின் அதிரடிதாக்குதலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் புல்வாமா தாக்குதலில் உயிரிந்த  சிவச்சந்திரனின் மனைவி காந்திமதி கூறும்போது,  ’’பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் வேரோடு அழிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

. பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் ராணுவ வீரர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியவர்,  பெண்கள் தங்களது கணவர்களை இழந்து தவிக்கிறார்கள். குழந்தைகள் அப்பா என்று அழைக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே பயங்கரவாதிகளை இந்திய ராணுவத்தினர் வேரோடு அழிக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழந்த வீரர்களின் ஆத்மா சாந்தியடையும்… என்று கூறியுள்ளார்.

அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் மனைவி கிருஷ்ணவேணி கூறும்போது, சிஆர்பிஎப் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது சந்தோசத்தை தருவதாகவும், இந்திய ராணுவத்தின் விமானப்படைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.