பாகிஸ்தான்: இம்ரான் கானுக்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் வரும் 25ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சியும் போட்டியிடுகிறது. இந்நிலையில் கடந்த 12ம் தேதி முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ் ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டனர். விமானநிலையத்தில்
அவர்களை வரவேற்க அவர்களது ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.

இது குறித்து தெஹ்ரீக் இ இன்சாப் தலைவர் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில்,‘‘ஷெரீப்பை விமான நிலையத்தில் வரவேற்க செல்பவர்கள் நிச்சயம் கழுதைகளாக இருக்க வேண்டும்’’என்றார். இதற்கு பாகிஸ்தான் முஸ்லிம் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இது குறித்த தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ‘‘அரசியல் எதிரிகளுக்கு எதிராக தேர்தல் பிரசாரத்தில் முறையற்ற வார்த்தைகளை இம்ரான் கான் பேசுவதற்கு பாகிஸ்தான் தேர்தல் ஆணையமும் தடை விதித்தது. ஆணையத்தின் முன் இன்று ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் இம்ரான் கான் ஆஜராகவில்லை. அவரது கட்சியின் தலைவர்களில் ஒருவர் மட்டுமே வக்கீலானா ஆஜரானார்.