நியூயார்க்:

ஐக்கிய நாடுகள் சபையில் காஷ்மீரில் எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் தூதர் மல்லிகா லோகி காட்டிய புகைப்படம் பொய் என்பது தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது.

ஐ.நா. ஆண்டு பொது சபை கூட்டம் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுகையில் பாகிஸ்தானை வெளுத்த வாங்கினார். அவரது பேச்சுக்கு பெரும் பாராட்டு கிடைத்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் ஐநா தூதர் மல்லிகா லோகி பேசுகையில், ‘‘இந்தியா தெற்காசிய பயங்கரவாதத்தின் தாயகம்’’ என்றார். அதோடு காஷ்மீரில் இந்திய ராணுவத்தில் பெல்லட் குண்டு தாக்குதலில் பாதித்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை காட்டினார். ஆனால் அந்த பட்ம் காஷ்மீரில் எடுக்கப்பட்டது கிடையாது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது.

உண்மையில் அந்த படம் 2014-ல் பாலஸ்தீனத்தின் காஸாவில் எடுக்கப்பட்டதாகும். இந்த படத்தை கார்டியன் நாளேடு வெளியிட்டிருந்தது. 3 ஆண்டுக்கு முன் வெளிவந்த படத்தை காஷ்மீரில் எடுத்தது என சொன்ன பாகிஸ்தானுக்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.