பாகிஸ்தான்: பெனாசீர் கணவர் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் தடை

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோவின் கணவரான ஆசிப் அலி சர்தாரி 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை அந்நாட்டு அதிபராக பதவி வகித்தார். அந்நாட்டின் யுனைடெட் வங்கி மற்றும் சம்மிட் வங்கிகளில் 29 போலி கணக்குகளை தொடங்கி நிதி மோசடி செய்ததில்ல் ஆசிப் அலி சர்தாரி, அவரது சகோதரி பர்யால் தல்புர் ஆகியோர் உள்பட 20 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதில் சம்மிட் வங்கி தலைவர் உசேன் லவாய் 6ம் தேதி கைது செய்யப்பட்டார். இதில் தொடர்புள்ள 20 பேரையும் 12ம் தேதி ஆஜராகுமாறு உச்சநீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது. இந்த 20 பேரும் பாகிஸ்தானை விட்டு வெளியேற தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Pakistan's Supreme Court banned former president and Benazir Bhutto's husband Asif Ali Zardari from travelling abroad in a fake bank accounts case, பாகிஸ்தான்: பெனாசீர் கணவர் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் தடை
-=-