இஸ்லாமாபாத்:

நம்நாட்டில் லாரி டிரைவர்கள் கிளீனர்களை லாரியை ஓட்டச் சொல்லிவிட்டு தூங்குவார்களே, அது போன்ற சம்பவம் பாகிஸ்தான் நாட்டு விமானத்தில் நடந்துள்ளது.

கடந்த மாதம் 26ம் தேதி இஸ்லாமாபாத்தில் இருந்து லண்டனுக்கு 305 பயணிகளுடன் பாகிஸ்தான் சர்வதேச விமானம் (பிஐஏ) ஒன்று புறப்பட்டுச் சென்றுள்ளது.

விமானம் வானத்தில பறக்க ஆரம்பித்த சில மணி நேரத்தில் அதன் மூத்த விமானி அமிர் அக்தர் ஹாஸ்மி என்பவர் பயிற்சி விமானியான முகமது ஆசாத் அலி என்பவரிடம் விமானத்தை ஓட்டச் சொல்லவிட்டு, ஹாயாக வந்து விமானத்தின் பிசினஸ் கிளாஸ் பயணிகள் இருக்கையில் உட்கார்ந்து காலை நீட்டிக் கொண்டு நன்றாக தூங்கிவிட்டார்.

சுமார் இரண்டரை மணி நேரம் அவர் தூங்கியுள்ளார். இதனால் நடுவானில் 305 பயணிகளும் உயிரும் பணையம் வைக்கப்பட்டது. அந்த விமானி தூங்கும் புகைபடத்தை பயணி ஒருவர் செல்போனில் படமெடுத்து சமூக வளைதளத்தில் பதிவிட்டார். இவர் அந்த விமானி மீது புகாரும் அளித்துள்ளார்.

ஆனால், அந்த விமானி பாகிஸ்தான் சர்வதேச விமானிகள் சங்க முன்னாள் தலைவராவார். அதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டப்படுகிறது. ஆனால் நடவடிக்கை எடுக்க உயர் அழுத்தம் கொ டுக்கப்பட்டு வருகிறது.

விமான நிறுவன செய்திதொடர்பாளர் தான்யால் கிலானி கூறுகையில், ‘‘ஹஸ்மி பறக்கும் பணியின் போது ஓய்வெடுத்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது’’ என்றார்.

‘‘ஹாஸ்மி ஒரு விமானி பயிற்சியாளர். இதற்கான அவர் மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் வாங்குகிறார். அப்படி இருக்கும் போது அவர் பயிற்சி அளிக்காமல் எப்படி தூங்கலாம்?’’என்று புகார் தெரிவித்த பயணி டான் கேள்வி எழுப்பியுள்ளார்.