ஜூன் 21-ம் தேதி ரிலீசாகும் தனுஷின் ‘பக்கிரி’…!

தனுஷ் நடித்துள்ள‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆஃப் த ஃபகிர்’ ஹாலிவுட் படம் ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் தயாரானது. கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்தப் படம், கடந்த வருடம் (2018) மே 30-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.

இப்படத்தைத் தமிழில் ‘வாழ்க்கைய தேடி நானும் போனேன்’ என்ற பெயரில் வெளியிட முடிவெடுத்து, ஃபர்ஸ்ட் லுக்கை கடந்த வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டார் தனுஷ். ஆனால் ரிலீஸாகவில்லை.

இந்நிலையில், ஒய் நாட் எக்ஸ் நிறுவனம் இந்த படத்தை ‘பக்கிரி’ என்ற தலைப்பில்(ஜூன்) 21-ம் தேதி வெளியிடுகின்றனர்.

இப்படத்திற்கு மதன் கார்க்கி, தமிழில் பாடல்கள் எழுதியுள்ளார்.