கோவை:

நாளை பக்ரீத்திருவிழாவை ஒட்டி கோவை தெற்கு மாவட்டத்தில் 50000 ஏழை இஸ்லாமி யர்களுக்கு ஆடு, மாடு கறி வழங்கப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பின் கோவை தெற்கு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அமைப்பின் கோவை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் – (ஊடக பொறுப்பு) நசீர் அஹமத்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாது:

தியாகத் திருநாள் அல்லது ஹஜ் பெருநாள் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டத்தின் சார்பாக நாளை (2-9-2017) அன்று 20க்கும் மேற்ப்பட்ட கீழே கொடுக்கப்பட்டுள்ள திடல்களில் சிறப்பு தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த தொழுகையில் சுமார் 1 லட்சத்திற்க்கும் மேலான முஸ்லிம்கள் பங்கேற்பார்கள். தொழுகைக்கு பின் பெருநாள் உரையும் பிரார்த்தனையும் நடைபெறும்.

அதனை தொடர்ந்து இறைவனுக்காக ஆடு மாடு பிராணிகளை அறுத்து தங்களது குடுப்பத்தாருக்கு மற்றும் ஏழைகளுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை தெற்கு மாவட்டத்திலலுள்ள கிளைகள் சார்பாக 50,000 ஏழைகளுக்கு இறைச்சி வழங்க பிராணிகள் வாங்கப்பட்டுள்ளது.

கோவை தெற்கு மாவட்டத்தில் தொழுகை நடைபெறும் இடங்கள்

1) அல்அமீன் காலனி ரோஸ் கார்டன்

2) ஆனைமலை ABN மில்

3) ஆசாத் நகர் அத்தார் ஜமாஅத் பள்ளி கூடம்

4) G.M.நகர் மாதா ஸ்கூல்

5) போத்தனூர் மாதா ஸ்கூல் மைதானம்

6) செல்வபுரம் HE பில்டிங் முன் புறம்

7) குனியமுத்தூர் மஸ்ஜிதுன் நூர் வளாகம்

8) வசந்தம் நகர் மஸ்ஜிதுல் ஹிதாயா வளாகம்

9) மதுக்கரை மஸ்ஜிதே மர்யம் பள்ளி திடல்

10) சாரமேடு மஸ்ஜிதுல் அஹத் பள்ளி வளாகம்

11) பொள்ளாச்சி மஸ்ஜிதுல் ஹக் பள்ளி பின்புறம்

12) சூலேஸ்வரன் பட்டி மதரஸதுதத் தவ்ஹீத் பள்ளி வளாகம்

13) சுகுணாபுரம் செந்தமிழ் நகர் திடல்

14) திருமறை நகர – மதரஸதுதத் தவ்பா பள்ளி வளாகம்

15) குறிச்சிப்பிரிவு டெக்சிட்டி காலேஜ்

16) பொன்விழா நகர் சூப்பர் கார்டன் மைதானம்

17) முஸ்லிம் காலனி முஸ்லிம் காலனி சுகாதார மையம்

18 ) பிஸ்மி காலனி பிஸ்மி காலனி பள்ளீ பின்புறம்

19) கோட்டை புதூர் கிளை- ஷேன்ஸ் ஸ்கூல் –

20) கஸ்தூரி கார்டன் பிள்ளையார் புறம் சைட்

இதே போல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக மேட்டுபாளையம், காரமடை, கவுண்டம்பாளையம்,துடியலூர், உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட 20 க்கும் மேற்ப்பட்ட இடங்களில் சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.