பாலம் கல்யாண சுந்தரத்தின் கதை – கோலிவுட் & பாலிவுட்டில் படமாகிறதா?

தமிழகத்தின் புகழ்பெற்ற சமூக சேவகர்களுள் ஒருவரான பாலம் கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை கதை பாலிவுட் & கோலிவுட்டில் படமாக தயாராகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியில், தயாரிப்பாளர் ஆதர்ஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியில், பாலம் கல்யாண சுந்தரத்தின் வேடத்தில் நடிக்க, அமிதாப் பச்சனை அணுகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்காக, கல்யாண சுந்தரத்தின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகம், அமிதாப்பிடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள்.

மேலும், தமிழில் அந்த வேடத்திற்கு ரஜினிகாந்த் நடிப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவாம். இன்னொரு தயாரிப்பாளரான முகேஷ், இதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னொருமுறை, பாலம் கல்யாண சுந்தரத்தை, தனது தந்தையாக தத்தெடுத்து தனது வீட்டில் சிறிதுகாலம் வைத்திருந்தார் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.