பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா

மதுரை: பழனி  சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏ  ஐ.பி. செந்தில் குமாருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஐ.பெரியயசாமிய்ன மகன், ஐ.பெ.செந்தில்குமார் பழனி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அவருக்கு  கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில். அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கார்ட்டூன் கேலரி