69 குழந்தைகள் பெற்ற தாய் உயிரிழப்பு

டெல்லி:

69 குழந்தைகளை பெற்ற 40 வயது தாய் இறந்தார். அல் அரேபியா என்ற அந்த பாலஸ்தீனிய பெண் 16 முறை இரட்டை குழ ந்தைகள், 7 முறை 3 குழந்தைகள், 4 முறை 4 குழந்தைகள் என மொத்தம் 69 குழந்தைகளை பெற்றுள்ளார்.

இதை அவரது கணவர் காசா அல் அன் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த தகவலை ராய்யால்யோயும் இணையதளமும் உறுதி செய்துள்ளது. இவர் கடந்த 26ம் தேதி காசா ஸ்ட்ரிப்பில் இறந்தார். இவர் இறப்புக்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

ஒரு பெண் அதிக குழந்தைகள் பெறுவது என்பது இது முதல் முறையல்ல. ரஷ்யாவை சேர்ந்த வசியேல்வா என்ற பெண் 60 குழ ந்தைகளை பெற்று கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.