சரத்குமார் நடிக்கும் பாம்பன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

யக்குநர் ஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் உருவாகவிருக்கும் பாம்பன் திரைப்படத்தின் பாடல் பதிவு இன்று நடந்தது. எஸ்எஸ்கே புரொடக் ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.

இதனை நடிகர் சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெவித்துள்ளார். படத்திற்கு தேவா இசையமைக்கிறார். படத்தில் நடிக்கும் மற்றவர்கள் குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிய வருகிறது

சரத்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள “பாம்பன்” பட ஸ்டில்கள் பாம்பின் உடல் அமைப்பில் இருக்கும் சரத்குமார் இருப்பது போல வித்தியாசமாக இருக்கின்றன. இவற்றை அவரது ரசிகர்கள் பலரும் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.