ஆதார் எண்ணுடன் பான் இணைப்பு! சர்ச்சைகள்

டில்லி,

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் அரசின் உத்தரவுக்கு தொடக்கத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

பின்னர் மத்திய அரசின் பதிலைத் தொடர்ந்து, ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்பது சரிதான் என்று தீர்ப்பு கூறியது.

இந்நிலையில், வருமான வரி செலுத்துபவர்கள் பலர் பான் எண்ணுடன், ஆதார் எண் இணைக்க கால அவகாசம் கோரியதால், மத்திய அரசு அதற்கான கால அவகாசம் ஆகஸ்டு 31ந்தேதி வரை நீடிப்பதாக கூறியிருந்தது.

இந்நிலையில், வருமான வரி கணக்கு தாக்கல் செய்து, தங்களிடம் இருந்து வருமானத்துக்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட வரியை  திரும்ப பெற விரும்புபவர்கள் மட்டுமே ஆதார் கண்டிப்பாக இணைக்க வேண்டும் என்றும், அவ்வாறு பணம் திரும்ப பெறாதவர்கள் ஆதார் எண்ணை இணைக்க தேவையில்லை என்றும் கருத்து நிலவி வருகிறது.

மேலும் கால அவகாசம் நீடித்து இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

இந்நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியாது, வருமான வரிக்காக்கன ரிட்டன் தாக்கல் செய்யமுடியாது.

மேலும், இதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்டமாட்டாது என்றும், அவ்வாறு இணைக்காத வர்கள்   அரசின் எந்த ஒரு சமூக நலன் சார்ந்த திட்டங்களின் பலன்களையும் பெற முடியாது என்று கூறப்படுகிறது.