பனாமா பேப்பர் கசிவு…. நடிகர் அமிதாபச்சன் தொடர்பு ஆவணங்கள் சிக்கியது

டில்லி:

2016ம் ஆண்டில் பனாமா பேப்பர் கசிவு விவகாரத்தில் பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் மற்றும் அவரது குடும்பத்திற்கு தொடர்பு இருப்பதற்கான மேலும் சில ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதை சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்களின் கூட்டு இயக்கம் மற்றும் ஜெர்மன் நாளிதழ் ஒன்று வெளியிட்ட தகவல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிப்படுத்தியுள்ளது.

இதில் மொசாக் ஃபொன்சேகா நிறுவனம் எவ்வாறு ரகசியமாக கணக்குகளை பராமரித்து வந்தது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமிதாபச்சன் உள்ளிட்ட பலர் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றனர். தற்போது வெளியாகியுள்ள புதிய ஆவணங்கள் மூலம் லேடி ஷிப்பிங் நிறுவனம்ல டிரஷர் ஷிப்பிங் நிறுவனம் ஆகியவற்றில் அமிதாபச்சன் இயக்குனராக இருக்கும் தகவல் மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்தில் தொடர்பு ஆவணங்கள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அமிதாபச்சனுக்கு லண்டன் சார்ந்த மினர்வா டிரஸ்ட் என்ற நிறுவனம் மூலம் 90 நாட்கள் கொண்ட நோட்டீஸை வழங்கியுள்ளது. இந்த இரு நிறுவனங்கள் மற்றும் சீ பல்க் ஷிப்பிங் நிறுவனத்தின் நிர்வாகி அமிதாபச்சனை இயக்குனர் என்று குறிப்பிட்டுள்ளார். மொசாக் ஃபொன்சேகா சீ பல்க் ஷிப்பிங் நிறுவன ஏஜென்ட் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்ளும் வகையில் அந்த நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது.

2017ம் ஆண்டில் பனாமா பேப்பர் கசிவு குறித்து நீண்டதொரு பதிவை அமிதாப் வெளியிட்டிருந்தார். அதில், இந்த வயதான நேரத்தில் தாம் அமைதி மற்றும் சுதந்திரம் தேவைப்படுவதாக தெரிவித்திருந்தார். மேலும், தன் மீதான குற்றச்சாட்டுக்களை அவர் மறுத்திருந்தார்.

2016ம் ஆண்டிப் பனாமா பேப்பர்ஸ் கசிவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு அமிதாபச்சன் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை அவர் தொடங்கினார். 1995ம் ஆண்டில் அவர் 4 வெளிநாட்டு ஷிப்பங் நிறுவனங்களில் இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச சட்ட நிறுவனமான மொசாக் ஃபொன்சேகா நிறுவனத்திடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்ந்து ஆய்வுகளையும், விசாரணையையும் மேற்கொண்டது. இதன் மூலம் அமிதாபச்சன் இயக்குனராக உள்ள ஒரு நிறுவனம் விர்ஜின் தீவிலும், இதர 3 நிறுவனங்கள் 1993ம் ஆண்டில் பகாமாஸ் வரி அமைப்புகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 நிறுவனங்களில் அமிதாபச்சன் நிர்வாக இயக்குனர் பதவிகளையும் வகித்துள்ளார். இதர இயக்குனர் கார்பரேட் மற்றும் நிதி பொறுப்புகளை கவனித்து வந்துள்ளனர். இந்நிறுவனங்களில் வாரன்ட் செக்கரட்ரீஸ் நிறுவனம் செயலாளர்களை நியமனம் செய்துள்ளது. 1994ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி நடந்த டிராம்ப் ஷிப்பிங் நிறுவனம் மற்றும் ஷி பல்க் ஷிப்பிங் நிறுவன இயக்குனர்கள் கூட்டத்தில் அமிதாபச்சன் தொலைபேசி உரையாடல் மூலம் கலந்துகொண்டுள்ளார்.

பனாமா பேப்பர்ஸ் தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளியான தகவல்களை அமிதாப் மறுத்தார். இது குறித்து பல விசாரணைகள் முகமைகளின் விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார். மத்திய நேரடி வரி வாரியம் தலைமையில் இந்த விசாரணை நடந்து வருகிறது. பனாமா பேப்பரில் குறிப்பிடப்பட்டிருந்த 426 இந்தியர்களும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டனர். 2018ம் ஆண்டு ஜூன் வரை கணக்கில் வராத வருமானத்தில் மதிப்பு ஆயிரத்து 88 கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.