பஞ்ச பட்சி சாஸ்திரம்

 பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது என்ன?*


*ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் பட்சி உண்டா…?*
பட்சிகளின் முதன்மை என்றால் அது காகம் தான்.
ஏன் என்றால் அது தான் பலம் அதிகம் பெற்றது
மயில் வலிமை குறைந்தது.
பஞ்சபட்சி பற்றி சித்தர்களில் போகர், அகத்தியர், இராமதேவர், உரோமரிஷி, போன்றோர் நூல்கள் எழுதியுள்ளனர்.
*ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு பட்சி உண்டு.*
 
*வல்லூறு:* அஷ்வினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம்
 
*ஆந்தை:* திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம்
 
*காகம்:* உத்தரம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம்.
 
*கோழி:* அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்ராடம்.
 
*மயில்:* திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி.
*படுபட்சி நாட்கள்:* படுபட்சி என்பது அவருடைய பட்சி செயலிழந்து விடும். இந்நாட்களில் எந்தவித சுபகாரியமும், பிரயாணமும், புதிய முயற்சிகளும் செய்யக் கூடாது.
 
*வல்லூறு* – படுபட்சி நாட்கள்
*வளர்பிறையில் -* வியாழன், சனி
*தேய்பிறையில் -* செவ்வாய்
*ஆந்தை*– படுபட்சி நாட்கள்
*வளர்பிறையில்* – ஞாயிறு, வெள்ளி
*தேய்பிறையில்* – திங்கள்
*காகம்* – படுபட்சி நாட்கள்
*வளர்பிறையில்* – திங்கள்
*தேய்பிறையில்* – ஞாயிறு
 
*கோழி* – படுபட்சி நாட்கள்
*வளர்பிறையில்* – செவ்வாய்
*தேய்பிறையில்* – வியாழன், சனி
 
*மயில்* – படுபட்சி நாட்கள்
*வளர்பிறையில்* – புதன்
*தேய்பிறையில்* – புதன், வெள்ளி
 
பட்சியின் நட்சத்திற்குரியோர் உரிய காலத்தை அறிந்து செயலை துவங்க வேண்டும்.