சென்னை:  ஆகஸ்டு 15ந்தேதி சுதந்திரத்தினத்தன்று தேசிய கொடி ஏற்ற மறுக்கப்பட்ட பட்டியலிட ஊராட்சித் தலைவர், இன்று கலெக்டர் முன்னிலையில் தேசிய கொடி ஏற்றினார்.

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி தாலுகாவில், ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் கடந்த 15ந்தேதி சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அந்த ஊராட்சியின் தலைவராக பட்டியலினத்தைச் சேர்ந்தவரான  அமிர்தம் என்பவர் உள்ளார். சாதி பாகுபாட காரணமாக, அவரை   தேசிய கொடியேற்ற விடாமல் ஊராட்சி மன்ற செயலாளர் சசிகுமார் உள்பட சிலர் தடுத்து விட்டதாக கூறப்பட்டது. இது சர்ச்சையானது. மனித உரிமைகள் ஆணையமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து,  ஊராட்சிமன்றச் செயலாளர் சசிகுமார் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, எஸ்.பி.அரவிந்தன் ஆகியோர்,  இன்று ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு வந்து, ஊராட்சி மன்ற தலைவரான   அமிர்தம் அம்மாளை தேசிய கொடி ஏற்றச் செய்தனர்.  ஆட்சியர் மகேஸ்வரி,  முன்னிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தேசியக் கொடியேற்றினார் அமிர்தம்.